Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம் தயார்: ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்

சென்னை: சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான இடம் தயாராக இல்லாத நிலையில் தற்போது மாநகருக்குள் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் சென்னை மாநகருக்குள் வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படவேண்டும் என்று CMDA தரப்பில் இருந்தும், போக்குவரத்து துறை தரப்பில் இருந்தும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கிளாம்ப்பக்கத்தில் புதிய பேருந்துகள் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கபட்ட சில நாட்களில் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை அடுத்து நீதிமன்றத்தை நாடிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை நகருக்குள் உள்ள அவர்களது பணிமனையில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி கோரினர். இதனை அடுத்து நீதிமன்றம் இடைகால உத்தரவாக ஜூன் 2-ம் தேதி வரை சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வர அனுமதித்தது.

இதனை அடுத்து போக்குவரத்து துறை மே 31-ம் தேதிக்கு பிறகு ஜூன் 1-ம் தேதி முதல் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் கிளாம்ப்பக்கத்தில் இருந்து இயக்கபட வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முடிசூர் அருகே அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுத்ததில் போதிய இடவசதி இல்லை என கூறப்பட்ட நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாடகை முறையில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.