Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரள சட்டசபையில் அமளி ஆளும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே மோதல்

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை நேற்று காலை தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் பேசுகையில், தாங்கள் அளித்த முக்கியத்துவம் உள்ள கேள்விகள் முக்கியத்துவம் இல்லாத கேள்விகளாக மாற்றப்பட்டுள்ளதற்கு சபாநாயகர் ஷம்சீர் தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களில் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்று சபாநாயகர் ஷம்சீர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், சபாநாயகர் ஷம்சீரை அவமரியாதையாக பேசியதின் மூலம் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார் என்று கூறினார். இதன்பின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் சபைக்கு திரும்பினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் முதல்வர் பினராயி விஜயனை விமர்சித்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை மறைத்தபடி பேனர்களை ஏந்தியபடி கோஷமிட்டனர். சபை காவலர்கள் அங்கு விரைந்து சென்று எதிர்க்கட்சியிரை வெளியேற்றினர். இதை தொடர்ந்து கேரள சட்டசபை நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.