திருவனந்தபுரம்: கேரளாவில் இந்த மாதத்தில் 282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் அறிகுறி உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா நோய் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் மும்பை, அகமதாபாத், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா மெதுவாக தலைகாட்டி வருகிறது. இந்நிலையில் கேரளாவிலும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 282 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், நோய் அறிகுறி உள்ளவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Advertisement


