மதுரை: கீழடி அகழாய்வு அறிக்கை விசயத்தில் அறிவியல் ஆதராங்கள் வேண்டும் என்று இப்போது கேட்கும் நீங்கள், ஏன் இதற்கு முன்பு நீதிமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இதைச் சொல்லவில்லை?
போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது? இது வெறும் அறிக்கை வெளியிடும் பிரச்னை அல்ல; உண்மைக்கும் கயமைக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.


