Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைப்பு!

சென்னை: கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3D முறையில் 2 முகங்கள் வடிவமைத்துள்ளனர். கொந்தகையில் 800மீ அகழாய்வில் இந்த மண்டை ஓடுகள் கண்டெடுத்தனர்.

DNA பகுப்பாய்வு நடத்தி இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றி அறிய திட்டமீட்டுள்ளனர். கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பெரும்பாலான எலும்புக்கூடுகள் 50 வயது மனிதர்களுடையவை. கொந்தகை பகுதியில் வாழ்ந்த ஆண்கள் 5.7 அடியும், பெண்கள் 5.2 அடி உயரத்திலும் இருந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

* தங்கம் தென்னரசு

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் கீழடியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய மக்களின் முக அம்சங்களை மீண்டும் உருவாக்கி, தமிழ் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு மீண்டும் எடுத்துக்காட்டுகிறது என்பதில் நான் மிகுந்த பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன்.

ஒன்றிய பாஜக அரசு தமிழர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை வஞ்சகமாக நசுக்க முயன்றாலும், கீழடி அகழ்வாராய்ச்சியிலிருந்து வெளிவரும் ஆக்கபூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் வரலாற்று சான்றுகள் ஒன்றிய அரசின் அநீதி மற்றும் மறுப்புகளைத் தொடர்ந்து முறியடித்து வருகின்றன. கீழடி ஆராய்ச்சி அறிக்கையை குறைந்தபட்சம் இப்போதாவது வெளியிடுமாறு ஒன்றிய அரசை நான் வலியுறுத்துகிறேன்.

* கீழடியில் உள்ள கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் ரீதியாக உறுதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறை இப்போது கீழடியில் உள்ள கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழியில் நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில் உள்ளது.