Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து உயர் ரக போதை மாத்திரை விற்பனை: கோவையில் 5 பேர் கைது

கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்க கோவை மாநகர போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கோவை கரும்புக்கடை காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின் மற்றும் 116 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அவர்கள் கர்நாடகா மாநிலம் ஹூப்ளி பகுதியை சேர்ந்த பிரவின் செட்டி (36), கோவை குறிச்சி பிரிவை சேர்ந்த சாகுல் அமீது (27), சவுரிபாளையத்தைச் சேர்ந்த முருகன் (27), குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ்கான் (24) மற்றும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த அக்பர் அலி (28) என்பது தெரியவந்தது. கைதான் பிரவின் செட்டி கர்நாடகா மாநிலம் ஹூப்ளி என்ற இடத்தில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். அவர் அங்கிருந்து உயர் ரக போதை மாத்திரைகளை கொண்டு வந்து சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி ஆகியோர் மூலம் விற்பனை செய்ய முயன்றுள்ளார். 14 ரூபாய் மதிப்புள்ள இந்த மாத்திரைகளை ரூ.60 விற்று வந்தம் தெரியவந்து உள்ளது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

* போதைக்கு அடிமை மாணவன் சாவு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் ஒரிச்சேரிப்புதூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கௌதம் (16). பத்தாம் வகுப்பு தேர்வில் 319 மதிப்பெண் பெற்றிருந்தார். விடுமுறையில் வீட்டில் இருந்த கௌதமுக்கு கடந்த 11ம் தேதி திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கௌதம் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான். விசாரணையில், கெளதம் அவரது நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் மற்றும் பஞ்சர் ஒட்ட பயன்படும் பேஸ்ட்டை அதிகளவில் பயன்படுத்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவன் இறந்ததாக கூறப்படுகிறது.