Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்

சென்னை: காமராஜர் ஆற்றிய சேவைகளை எந்நாளும் போற்றுவோம் என அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய தேசத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல், விடுதலை அடைந்த தேசத்தின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட பெருந்தலைவரும், தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய தன்னலமற்ற தலைவருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுதினம் இன்று.

எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரங்களை அடிப்படையாக கொண்டு தமிழ் வளர்ச்சி, கல்விப் புரட்சி, தொழில்வளர்ச்சி, பாசனத் திட்டங்கள் என தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலத்திற்காக மட்டுமே அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.