Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சியில் ஓட்டு மிஷின் மக்கர்; விவிபேட் மூலம் முடிவு அறிவிப்பு

கள்ளக்குறிச்சி, ஜூன் 6: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வருகிறது. இத்தொகுதிக்கு உட்பட்ட 81 மற்றும் 224 ஆகிய வாக்குச்சாவடி மையத்திற்கு உட்பட்ட மின்னணு இயந்திரங்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 151ல் இருந்த மின்னணு இயந்திரம், சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிங்கபுரம், நகராட்சி விநாயகபுரம் வாக்குச்சாவடி மின்னணு இயந்திரம் கோளாறு, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாவலூர் வாக்குச்சாவடி மின்னணு இயந்திரம் ஆகியவற்றில் கோளாறு காரணமாக எண்ணும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து வேட்பாளர்களின் முகவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோளாறு ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகிய ஓட்டுச் சீட்டுகளை கொண்டு வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.