கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
டெல்லி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விஷச்சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும். தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.