Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆயிரம் மாணவர்களுக்கு ஊக்க தொகை கல்வி உபகரணம், 20 பேருக்கு ஆட்டோ: அமைச்சர்கள் அன்பில், சேகர்பாபு வழங்கினர்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “காலம் உள்ளவரை கலைஞர்”, கலைஞர் 100 உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகள் நடந்தன. 91வது நிகழ்ச்சியாக ‘‘உயரட்டும் திராவிடர் வேதம்-ஒலிக்கட்டும் உதயகீதம்’’ எனும் தலைப்பில் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் 20 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ, 1000 கல்லூரி மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்க தொகை மற்றும் உபகரணங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினர்.

விழாவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன், மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி, ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.சந்துரு, எம்.விஜயகுமார், எஸ்.எம்.நாதன், சி.மகேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் ஸ்ரீராமுலு, சரிதா மகேஷ்குமார், பி.கே.மூர்த்தி கூ.பி.ஜெயின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 91வது நிகழ்ச்சியாக நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000 என்றும், அவர்கள் பயன்படுத்துகின்ற கல்வி உபரணங்கள் ஒரு லேப்டாப் பேக், நோட்புக், பார்க்கர் பேனா,ஒரு தண்ணீர் பிளாஸ்க் மற்றும் ஏழ்மை நிலையில் 20 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக 20 ஆட்டோக்களை சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து வழங்கியுள்ளோம்.

கல்வி உதவி தொகை பெற்ற மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியோடு கல்விக்கு கடவுளாக இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறியிருக்கின்றனர். இளைஞர்களும், இளைஞர்களை ஊக்குவிக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பல்வேறு போட்டிகளை உலக அளவில் ஆசிய துணை கண்டத்தின் அளவில் பல்வேறு போட்டிகளை தமிழ்நாட்டிலே நடத்தி இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பினை அளிக்கின்ற வகையில் திறம்பட செயல்படுகின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், பெரும் மகிழ்ச்சியோடு வாழ்த்துகள் கூறினர். தொடர்ந்து மீதம் இருக்கின்ற 9 நிகழ்ச்சிகளும் இந்த மாதத்திற்குள் நடத்தி முடிப்பது என்று முடிவு செய்து இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.