Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தலைவரே பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம்: கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தலைவரே பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். அதே போல் திமுக முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கலைஞரின் பிறந்தநாளான இன்று காலை 9 மணியளவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில்; இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியவர் கலைஞர். நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர். அதிகாரத்தால் அல்ல, அன்பால் போற்றப்படும் தலைவர் கலைஞர். புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்.

தமிழ்நாட்டின் நம்பிக்கை தீபமான கலைஞருக்கு நன்றி அடையாளமாக மதுரையில் நூலகம் அமைத்தோம். சென்னையில் கலைஞர் பெயரில் பல்நோக்கு மருத்துவமனை கட்டினோம். திருவாரூரில் கோட்டம் கண்டோம், அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கம் உருவாக்கினோம். சென்னையின் நுழைவாயிலில் கலைஞர் பெயரில் பேருந்து முனையம் கட்டினோம். உலகமே வியந்து பார்க்கும் நினைவகம் மெரினாவில் நிலை நாட்டினோம். தலைவரே பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம் இவ்வாறு கூறினார்.