சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்துசெய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 தேர்தல் வேட்புமனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து விபரங்களை மறைத்தது, போலியான PAN எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தின் வழக்கிற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement