Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீஞ்சூரில் பரபரப்பு ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை

பொன்னேரி: மீஞ்சூரில் அரசு ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 15 சவரன் நகை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். ஆவடிக்காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையம் அருகே உள்ள காமதேனு நகரில் வசித்து வருபவர் லட்சுமி கலா(46). இவர் பொன்னேரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் திருவாலங்காடு பட்டறைபெரும்பூதூரில் உள்ள அம்பேத்கர் அரசு கல்லூரியில் உள்ள அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் பொன்னேரியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தங்களது வேலைக்கு சென்று விட்டனர். அன்றுமாலை வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன பீரோ திறந்து கிடந்தன. பீரோவில் வைத்திருந்த சுமார் 15 சவரன் தங்க நகைகள் ரொக்கப் பணம் ரூ.8000 கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து லட்சுமி கலா மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், குற்றபிரிவு மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காமதேனு நகர், செட்டிநகர், ஹேமச்சந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து சோதனை செய்தும் வருகின்றனர்.