டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது.இதில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தோல்வி அடைந்தால் பிரதமர் இஷிபா ஷிகெருவுக்கு நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது. ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி ஆட்சி(எல்டிபி) நடக்கிறது. பிரதமராக இஷிபா ஷிகெரு இருந்து வருகிறார்.ஜப்பானின் நாடாளுமன்றமான டயட்டில் உள்ள இரு அவைகளிலும் அதிகாரம் குறைந்த மேலவையின் 248 இடங்களில் பாதி இடங்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.
பிரதமர் இஷிபா ஷிகெரு இத்தேர்தலில் 125 இடங்களில் வெற்றி என்ற எளிய பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். எல்டிபி மற்றும் அதன் கூட்டணி கட்சியான கோமெய்டோவுக்கும் நாடாளுமன்ற மேலவையில் 75 இடங்கள் உள்ளன. இதனால் கூடுதலாக 50 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்ற வேண்டும்.
விலைவாசி உயர்வு, வருமானம் குறைவு மற்றும் சமூக பாதுகாப்பு சுமை மற்றும் பண பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளால் வாக்காளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்படும் ஊடகங்கள் கணித்துள்ளன. இதில் தோல்வி ஏற்பட்டால் இஷிபா பதவி விலக நேரிடும் அல்லது கூட்டணியில் இன்னொரு கட்சியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழும் என்று கூறப்படுகிறது.