Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒருபுறம் மோடி பதவியேற்பு விழா..! மறுபுறம் ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு என தகவல்

ஜம்மு காஷ்மீர்: உதம்பூரில் மினி பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மன்வலில் இருந்து குஜ்ரு நக்ரோடாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பல முறை அங்கு மோசமான பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

அதேநேரம் சில மாதங்களாகக் காஷ்மீரில் பெரியளவில் தீவிரவாத சம்பவங்கள் நடக்காமல் இருந்தது. இதற்கிடையே இப்போது காஷ்மீரில் மீண்டும் ஒரு அசம்பாவிதம் அரங்கேறி இருக்கிறது. இதற்கிடையே இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி என்ற பகுதியில் பயங்கரவாத சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அங்குப் பேருந்து ஒன்று பக்தர்களை ஏற்றிச் சென்று கொண்டு இருந்துள்ளது. அதை நோக்கி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

அந்த பேருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு ஷிவ்கோடி குகைக் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த பயங்கரவாத சம்பவம் நடந்துள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தோரை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த உடன் உதவிக்காக ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட வீடியோக்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் உள்ளூர் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவுவது பதிவாகி இருக்கிறது.