ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உலகின் உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். சீனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயரமான ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். சீனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் ரயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கும். கத்ரா - ஸ்ரீநகர் இடையே 2 வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
+
Advertisement