ஜேம்ஸ் பியர்ட் விருது பெற்ற தமிழ்நாட்டைச்சேர்ந்த செஃப் விஜயகுமார்: சிகாகோவில் நடந்த விழாவில் சிறந்த சமையல்காரருக்கான விருதை வென்றார்
சிகாகோ: சிகாகோவில் நடைபெற்ற விழாவில் நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞருக்கான விருதை தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜயகுமார் வென்றுள்ளார். சிறந்த சமையல் கலைஞருக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதை தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜயகுமார் பெற்றுள்ளார். விழாவில் பேசிய அவர், சமைக்க தொடங்கிய போது தமிழ்நாட்டை சேர்ந்த கருப்பு தோலுடன் இருக்கும் தான் இப்படி ஒரு இடத்தில் இருப்பதை நினைத்து கூட பார்க்கவில்லை என்றும், அக்கறையுடன், ஆன்மாவுடன் சமைத்த உணவு தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர்; உணவகத்தில் ஏழையின் உணவு அல்லது பணக்காரரின் உணவு என்ற பேதம் இல்லை எனவும் தெரிவித்தார். ஜேம்ஸ் பியர்ட் விருதுகள் அமெரிக்காவின் மிக உயர்ந்த உணவு விருதுகளில் ஒன்றாகும். உணவகங்கள், சமையல்காரர்கள், புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவைகளின் திறமை மற்றும் சாதனைகளை இந்த விருது அங்கீகரிக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள தென் இந்திய உணவகமான செம்மா உணவகத்தில் திண்டுக்கலை சேர்ந்த விஜயகுமார் தலைமை செஃப்பாக பணியாற்றுகிறார். தென் இந்திய உணவை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதில் செஃப் விஜயகுமார் முக்கிய பங்கு வகிக்கிறார்.


