சென்னை: ஜெ.குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் படத்தின் இயக்குநர் கவுதமன் பதில் தர சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஜெ.குருவின் வாழ்க்கை வரலாற்றை அனுமதியின்றி படமாக எடுத்துள்ளனர் என குரு மனைவி கல்யாணி, மகள் விருதாம்பிகை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படையாண்ட வீரா திரைப்படத்துக்கு தடை விதிக்க மனுவில் இருவரும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement


