இஸ்ரேல், ஈரான் நாடுகளில் உள்ள தமிழர் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை : இஸ்ரேல், ஈரான் நாடுகளில் உள்ள தமிழர் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், இஸ்ரேல் - ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவ டெல்லியில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. தொலைபேசி எண் 011 24193300 கைப்பேசி எண் 9289516712 எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


