Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈஷா அவுட்ரீச்சின் தென்சேரிமலை FPO-விற்கு 'சிறந்த FPO' விருது; நபார்ட் 43வது ஆண்டு விழாவில் கௌரவிப்பு

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டு வங்கியின் 2023 - 34 ஆம் நிதியாண்டிற்கான சிறந்த FPO விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற 43 வது ஆண்டு விழாவில் இந்த விருதை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாட்டின் நபார்டு வங்கியின் ஆதரவில் சிறப்பாக செயல்படும் FPO களில் ஒன்றாக தென்சேரிமலை FPO இந்த விருதினை பெற்றுள்ளது. நபார்டு வங்கி சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் தென்சேரிமலை உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனரும் விவசாயியுமான திரு. ரங்கராஜ் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நலதா ஆகியோர் அமைச்சரிடம் இருந்து இந்த விருதினை பெற்றுக் கொண்டனர்.

மண் காப்போம் இயக்கத்தின் ஓர் அங்கமான ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25  FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. கோவை சுல்தான் பேட்டை பகுதியில் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டே  750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் உறுப்பினராக இணைந்தனர்.

இதில் உறுப்பினர்களாக உள்ள  விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதலில் உறுதுணையாக இருந்து வழிகாட்டுதல்களை  இந்த FPO வழங்கி வருகிறது. தென்னையை முதன்மை பயிராக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் முதலாமாண்டு மொத்த விற்பனை ரூ.1.58 கோடி ஆகும். மேலும் ஈஷா அவுட்ரீச்சின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் FPO-க்களின் மூலம் மொத்தம் 9,377 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த விழாவில் நபார்ட் வங்கியின் தலைமை மேலாளர், மண்டல மேலாளர், ஆர்.பி.ஐ-இன் மண்டல மேலாளர் மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.