Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அரசு டி.வி. மீது ஏவுகணைத் தாக்குதல்: நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் அதிர்ச்சி

டெஜ்ரான்: ஈரான் நாட்டின் அரசு செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதலின் போது நேரலையில் செய்தி வாசித்து கொண்டிருந்த பெண் நூலிழையில் உயிர்தப்பி உள்ளார். ஈரான் ஏவிய ஏவுகணைகளால் இஸ்ரேலிய தலைநகரான டெல்அவிவ்வில் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஈரான் தலைநகர் டெஜ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரானிய அரசின் செய்தி தொலைக்காட்சியான ஐ.ஆர்.ஐ.டிவி செயல்பட்டு வரும் கட்டடத்தின் மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது செய்திகளை நேரலையில் வாசித்து கொண்டிருந்த ஷாஹர் ஹிமாமி என்ற செய்தி வாசிப்பாளர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வெளியேறினார். ஈரானிய அரசு தொலைக்காட்சி கட்டடத்தின் மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கட்டடம் பலத்த சேதமடைந்தது. அந்த கட்டடம் தீ பற்றி எறிந்த போது அதனை படம் பிடித்த நபர் ஒருவர் தனது விடியோவை வெளியிட்டுள்ளார். இதனிடையே தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே தனது ஒளிபரப்பை மீண்டும் தொடங்கிய ஐ.ஆர்.ஐ.வி டிவியின் ஷாஹர் ஹிமாமியே மீண்டும் செய்தி வாசித்தார். அப்போது உடன் பணிபுரியும் ஊழியர்கள் கைகளை தட்டி அவரை உற்சாகப்படுத்தினர். தொலைக்காட்சி ஒளிபரப்பு அதே கட்டடத்தில் இருந்து தொடங்கப்பட்டதா அல்லது வேறு இடமா என்பது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

தொலைக்காட்சி நிலையம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்பு பொதுமக்களை அங்கிருந்து உடனே வெளியேறுமாறு தாங்கள் எச்சரித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ச்ஜ் தெரிவித்துள்ளார். ஈரானியம் ஒளிபரப்பு ஆணையம் போர் பதற்றத்தை அதிகரித்து வருவதாகவும் தற்போது அந்த பிரச்சார நிறுவனம் காணாமற்போய் விட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார். ஈரானிய படைகள் பதுங்கி இருப்பதற்கும் பொதுமக்கள் என்ற போர்வையில் இருந்தபடி ஈரான் ராணுவம் இங்கிருந்து செயல்படுவதற்கும் இந்த கட்டடம் பயன்பட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது.