Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அமைச்சரவை கூட்டத்தில் பயணத்திற்கான ஒப்புதலை தமிழ்நாடு அமைச்சரவை வழங்கியது. இன்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்ற்றனர். தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 24700 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. வாகன தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் புதுப்பிக்கதக்க எரிசக்தி, பேட்டரி தயாரிப்பு ஆகிய தொழில்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஈரோட்டில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.1770 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரியில் கிரீன் டெக் ரூ.1,779 கோடி முதலீட்டு திட்டம் உருவாக்கம். காஞ்சிபுரத்தில் மதர்ஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2200 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 17-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம்படுகையில் ரூ.206 கோடியில் கட்டப்பட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் இட கட்டடம் திறக்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக 18,000 படுக்கை வசதியுடன் தொழிலாளர்களுக்கு தங்கும் இடம் வசதி செய்து தரப்படுகிறது. 3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நீரேற்று புனல் மின் திட்டம், காற்றாலை மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. 2030-க்குள் பசுமை எரிசக்தி மூலம் 20,000 மெகாவாட் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 20,000 மெகாவாட் உற்பத்தி இலக்கை எட்ட 3 முறைகளில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். காற்றாலை மின்உற்பத்தி புதிய கொள்கை மூலம் 25% மின் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.