Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேண்டாமே இந்தச் செயலி!

ashExpand-U Finance Assistant - Loan இந்தச் செயலி உங்கள் மொபைலில் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள். ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வசதிகளின் காரணமாக கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், இதன் மூலம் சில பிரச்சனைகள் அதிகரித்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில், கடன் வழங்கும் மொபைல் செயலி ஒன்றில் அதீத மோசடிகள் நிகழ்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மொபைல் செயலியின் பெயர் CashExpand-U Finance Assistant - Loan. இது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. இந்த செயலி உங்கள் மொபைலில் உடனடியாக நீக்கிவிடுங்கள். இச்செயலி மட்டுமல்ல பணம் சார்ந்த எந்தச் செயலி பயன்படுத்தினாலும் செயலியை தரவிறக்கம் செய்யும் பக்கத்தில் கீழே பயனாளர்கள் என்ன கருத்துகள், விமர்சனங்கள் கொடுத்துள்ளனர் என்பதை தீர விசாரித்து பயன்படுத்தவும். பணம் போகவில்லை என்றாலும் நம் அந்தரங்க அடையாளங்கள் இதன் மூலம் திருடப்படும் அபாயமும் உள்ளதால் கவனம் தேவை.