Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2060-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 170 கோடி என்ற உச்சத்தை தொடும்: ஐநா ஆய்வறிக்கையில் தகவல்

நியூயார்க்: 2060-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 170 கோடி என்ற உச்சத்தை தொடும் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 820 மில்லியன் 2080 களில் உச்சத்தை எட்டும் என்று ஐநா அறிக்கையில் கணித்துள்ளது. அடுத்த 50-60 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை அதிகபட்சமாக 1030 கோடியை எட்டும், இந்த நூற்றாண்டின் இறுதியில் 1020 கோடியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது. கருவுறுதல் விகிதத்தில் கணிசமான குறைவினால் மக்கள் தொகை குறைவதாக ஐநா அறிக்கை விளக்கியுள்ளது.

இந்தியா

இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு சீனாவை மிஞ்சி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியது. நடப்பு நூற்றாண்டு முழுவதிலுமே உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியாவே இருக்கும் என கணித்துள்ளது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054-ல் 169 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2060-ம் ஆண்டில் 170 கோடி என்ற உச்சத்தைத் தொடும் இந்திய மக்கள் தொகை, அதன்பின் படிப்படியாக குறையும் என மதிப்பீடு செய்துள்ளது. 2060-ம் ஆண்டுக்குப்பிறகு இந்திய மக்கள் தொகை 12% வரை குறைந்து 2100-ல் 150 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சீனா

சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 141 கோடியாகவும், 2054ல் 121 கோடியாக குறையும் என்றும் ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. 2100ல் இது 63.3 கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2100ல் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும். 2024-54க்குள் சீனாவின் மக்கள்தொகை பாரிய சரிவைச் சந்திக்கும் என ஐ.நா. ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் மக்கள் தொகை வேகமாக குறையும் என தெரியவந்துள்ளது. ஐநா அறிக்கையின்படி, 2024-54க்குள் சீனாவின் மக்கள் தொகை 20 மில்லியனாகவும், ஜப்பானின் மக்கள் தொகை 2 மில்லியனாகவும், ரஷ்யாவின் மக்கள் தொகை 1 மில்லியனாகவும் குறையும். 2100 ஆம் ஆண்டில், சீனாவின் மக்கள் தொகை 78.6 மில்லியன் குறைந்து 63 மில்லியனாக இருக்கும் என்று ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது.