டெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கடற்படையின் தளபதியாக உள்ள அட்மிரல் ஆர். ஹரி குமாரின் பதவிக்காலம் வரும் ஏப்ரம் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த பின்னர் தினேஷ் குமார் திரிபாதி பதவியேற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது. தற்போது கடற்படையின் துணை தளபதியாக உள்ள தினேஷ்குமார் திரிபாதி பணி மூப்பு அடிப்படையில் கப்பற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.



