பெர்த்: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணி வீரர் கேமரூன் கிரீன் விலகினார். அவருக்கு மாற்றாக மார்னஸ் லபுஷேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகியதால் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் பயிற்சியின் போது கேமரூன் கிரீனுக்கு காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக நாளை மறுநாள் தொடங்க உள்ள இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விலகினார். அவருக்கு பதிலாக ஃபார்மில் உள்ள பேட்டர் மார்னஸ் லாபுசாக்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மார்னஸ் லாபுசாக்னே ஆரம்பத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியதையடுத்து அவர் கிரீனுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். கேமரூன் கிரீன் முதுகு காயத்துடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பந்துவீச தொடங்கினார். மேலும் சமீபத்திய ஒருநாள் போட்டியில் அபார சதம்(118*) விளாசினார். இந்நிலையில் கேமரூன் கிரீன் விலகியது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
கிரீன், காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் தொடருக்கு முன்னதாக இந்த மாத இறுதியில் உள்நாட்டு மட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ்(C), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லாபுஷாக்னே, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்.
