Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய தகவல் தொடர்பு மையத்தில் எடிட்டர், நூலகர், செக்சன் ஆபீசர்

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Editor: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ.56,100-1,77,500. தகுதி: Journalism/Communication/Social Science/Literature ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.

2. Library & Information Officer: 1 இடம். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.44,900-1,42,400. தகுதி: Library & Information Science பிரிவில் முதுகலைப்பட்டம் தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம்.

3. Section Officer: 3 இடங்கள். வயது: 56க்குள். சம்பளம்: ரூ.44,900-1,42,400. தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு.

4. Senior Research Assistant: 1 இடம். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: சமூக அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.

5. Library & Information Assistant: 1 இடம். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: Library & Information Science பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.

6. Technical Assistant (Audio/Visual): 1 இடம். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.29,200-92,300. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.

7. Library Clerk: 1 இடம். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 30 வார்த்தைகள் அல்லது நிமிடத்திற்கு இந்தி 30 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் நூலக அறிவியல் படிப்பில் சான்றிதழ் மற்றும் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

https://iim.cnt.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2024.