Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா - இலங்கை இடையிலான மீனவர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி

சென்னை: ஆலந்தூர் மண்டல பாஜ அலுவலக திறப்பு விழா நங்கநல்லூர் 5வது பிரதான சாலையில் நேற்று நடந்தது. இந்த திறப்பு விழாவிற்கு ஆலந்தூர் மண்டல தலைவர் ஆர்.ஆர்.ராம கோபாலன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜி, குமார் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில் கூறியதாவது: தமிழ் மொழி மீது அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தவர்.

மீனவர்கள் நலனுக்காக அமைச்சரவையை கொண்டு வந்தது ஒன்றிய அரசு தான். மீனவர்களுக்கு 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கடன் உதவி செய்து உள்ளது. மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இரு நாடுகள் இடையே தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என அவர் பேசினார். இந்த கூட்டத்தில் பாஜ நிர்வாகிகள் ஜெயக்குமார், சுப்பையா, சூரி,ஆர்.நந்தகுமார், ராஜராஜன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.