மாஸ்கோ: பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில் கூட்டத்தின் இடையே பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை அஜித் தோவல் தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ உடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.எல்லை பிரச்னை, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறை குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
Advertisement