தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய நிறுவனங்கள் போலவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
சென்னை: 'ஸ்டார்ட்அப் சென்னை-செய்க புதுமை' திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி ஆராய்ச்சி வளாகத்தில் ‘ஸ்டார்ட்அப் சென்னை-செய்க புதுமை' திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையத்தையும் துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கு முக்கியமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய நிறுவனங்கள் போலவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி ரூ.50 கோடியாக உயர்த்தப்பட உள்ளது. மானியம், வங்கிக்கடன் என பொருளாதார ரீதியாக உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
பின்னர் சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; உள்நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலையில் மழை அதிகரித்ததை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மெட்ரோ பணிகள் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்தாலும் மெட்ரோ பணிகள் நடக்கும் இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.