லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாத எதிர்ப்பு படையினர் பல்ராம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் சட்டவிரோத மதமாற்ற மோசடியை முறியடித்தனர். இது தொடர்பாக லக்னோவில் உள்ள கோமதிநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜலாலுதீன் என்கிற சங்கூர் பாபா உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்து மற்றும் பிற சமூகங்களை சேர்ந்த நபர்களை இஸ்லாம் சமூகத்திற்கு மாற்றுவதற்காக இஸ்லாமிய நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


