Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி அமலக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய போதைப்பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 5 பேரும் நியூசிலாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி அதன் மூலம் கிடைக்கபெற்ற பணத்தை பல்வேறு விதங்களில் முதலீடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படயில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருபுறம், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், மறுபுறம் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக், அவரது நண்பர் திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோருக்கு சம்பந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு தகவல் கிடைக்கபெற்றதாக தகவல் வெளியானது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக தற்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்ய்ப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் கடந்த 8, 9, 10-ம் தேதிகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஜாபர் சாதிக்கின் மனைவிக்கு சம்மன் அனுப்பி நேற்று ஆஜராகும்படி உத்தரவிடபட்டது. இதனை அடுத்து நேற்று ஜாபர் சாதிகின் மனைவியிடம் சுமார் 6 மணி நேரம் நுங்கம்பாக்கதில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஜாபர் சாதிகின் சகோதரர் சலீம்-க்கு சம்மன் அனுப்பி இன்று காலை 10 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டனர். இதனை அடுத்து இன்று காலை சலீம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இந்த விசாரணையானது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.