Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை ஐஐடியில் புதிய படிப்புகள் அறிமுகம்

சென்னை: சென்னை ஐஐடிவெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இளநிலைப் படிப்புகளில் நுண்கலை மற்றும் கலாசார சிறப்புப் பாடத்துக்கு சென்னை ஐஐடி மாணவா் சோ்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. நுண்கலை, கலாசாரத்தில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு வெகுமதி அளித்து ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இந்தப் படிப்புக்கு கூட்டு இருக்கை ஆணையத்தின் போா்டல் (ஜோஸா) மூலம் மாணவவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. மாறாக பhttps://ugadmissions.iitm.sc.in/face என்ற இணையதளம் மூலம் சேர்க்கை நடைபெறும்.

இதேபோன்று தொழில் துறை, கல்வித் துறை ஆகியவற்றின் தேவைகளையும், மாணவர்களின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு நிகழாண்டு பி.எஸ். வேதியியல், மின்சார வாகனங்களில் எம்.டெக். ஆகிய இரு புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பி.எஸ். வேதியியல் படிப்புக்கு ஐஐஎஸ்இஆா் திறனறித் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும். இது 4 ஆண்டு இளநிலைப் படிப்பாகும். இதில், வேதியியலில் எம்.எஸ். ஆக மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

மாணவா்களுக்கு வேதியியல் மற்றும் அதனுடன் தொடா்புடைய அறிவியல் பாடங்களில் அடித்தளத்தை வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு கோட்பாட்டு அறிவை நடைமுறை ஆய்வக அனுபவத்துடன் கலந்து ஆராய்ச்சி, தொழில், கல்வி ஆகிய துறைகளில் மாணவர்களைத் தயார்படுத்துகிறது. மின்சார வாகனங்களில் எம்.டெக். படிப்புக்கு கேட் நுழைவுத் தோ்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவர் போக்குவரத்துத் துறை நிலையான எதிா்காலத்தை நோக்கி வியத்தகு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

இதற்கு மின் இயக்கம் மிக முக்கியமான காரணமாகும். இரு சக்கர, மூன்று சக்கர, வணிக வாகனங்கள் ஆகியவற்றில் விரைவான மின்மயமாக்கல் நடைபெற்று வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு மின்சார வாகனத் துறையில் எம்.டெக். படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.