மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. மதுரை மாநகராட்சி எவ்விதமான காலதாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்க நீதிபதி உத்தரவு அளித்தார். மதுரை கிரேஸ் கென்னட் மழலை இல்லம் சார்பில் சாமுவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுரை மாநகராட்சியின் பிறப்பு இறப்புப் பதிவு அலுவலர் விரைவாக எவ்வித காலதாமதமின்றி பிறப்பு சான்றிதழை வழங்க ஆணையிட்டுள்ளனர்.