கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பா.ஜ பூத் கமிட்டி கூட்டம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், பா.ஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பங்கேற்றார். பின்னர், அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு தொகுதிகளிலும் குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் அதிகமாக வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்கள். இந்த நீக்கம் என்பது ஒவ்வொரு பூத் கமிட்டி அரசியல் கட்சியின் முகவர்கள், அவர்கள் சரியாக தான் நீக்கப்பட்டு இருக்கிறார்களா? என்பதை சரிபார்க்க வேண்டும். இவற்றை எல்லாம் எச்சரிக்கையோடு பார்த்து சரியான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்கு தான் இன்றைய கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் 54 தொகுதிகளை பாஜ கேட்பதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு ‘எத்தனை தொகுதி? யார் வேட்பாளர்? என அனைத்தையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும். மாநிலத்தில் இருக்கின்ற தலைவர், உறுப்பினர்கள் எல்லாம் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர்’ என்றார்.


