Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: செஞ்சி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வரும் 18 குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கடம்பத்தூர் ஒன்றியம், செஞ்சி கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் தெருவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயக் கூலித் தொழில் செய்யும் இவர்கள் கட்டி இருக்கும் வீட்டிற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.

மேலும் இவர்கள் கட்டி இருக்கும் வீடுகள், ஈஸ்வரன் கோயிலுக்குச் சொந்தம் என்றும், இந்த வீடுகளை இந்து சமய அறநிலையத்துறை அப்புறப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வரும் இவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் கலெக்டர் த.பிரபு சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.