புதுடெல்லி: டெல்லி அருகே உள்ள குருகிராமை சேர்ந்த ராம்பிரஸ்தா ரியல் எஸ்டேட் நிறுவனம் வீடுகள்,மனைகள் விற்பனை செய்வதாக அறிவித்தது. கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் ஏராளமானோரிடம் பணம் வாங்கியுள்ளது.
ஆனால் 17 ஆண்டுகள் ஆகியும் எதுவும் வழங்காததால் நிறுவனத்தின் இயக்குனர்களான அரவிந்த் வாலியா,பல்வந்த் சவுத்ரி, சந்தீப் யாதவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குருகிராமில் உள்ள அந்த நிறுவனத்தின் ரூ.681.54 கோடி மதிப்புள்ள 1,900 ஏக்கர் நிலங்கள் முடக்கம் செய்யபட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.