Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒசூர் அருகே பள்ளி மாணவன் கடத்திக் கொலை: கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே மாவநட்டி கிராமத்தில் பள்ளி மாணவன் ரோகித் கடத்திக் கொலை செய்யப்பட்டார். 13 வயது மாணவன் ரோகித் மர்மநபர்களால் காரில் கடத்தி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு உதவியாக இருந்த 15 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் அஞ்சட்டி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறது. இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களது இளைய மகன் ரோகித் (13).

இவர் அப்பகுதியில் உள்ள பள்ளில் 8ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் தெரிவித்தனர். ஆனால், பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

தொடர்ந்து, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் இன்று காலை சாலையில் அமர்ந்து சிறுவனை மீட்டுத்தரக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சிறுவன் அஞ்செட்டி – ஒகேனக்கல் செல்லும் சாலை ஓரத்தில் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் பெற்றோர், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.