Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

*வண்ண பொடிகளை தூவி பெண்கள் உற்சாகம்

சேலம் : சேலம் நாராயண நகரில் வசித்து வரும் வட மாநிலத்தவர்கள், நேற்று உற்சாகமாக ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.வட மாநிலங்களில் முக்கிய பண்டிகையாக ஹோலி கொண்டாட்டம் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள், ஹோலியை குடும்பத்துடன் கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

அதேசமயம், தமிழகத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர்கள், இங்கேயே கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று சேலத்தில் ஹோலி கொண்டாட்டம் நடந்தது. வடமாநிலத்தவர் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் ஒன்றான நாராயண நகர் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

ஹோலி பண்டிகையின் அடையாளமான, வண்ண, வண்ண கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், முகத்தில் பூசிக்கொண்டும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், கலர்பொடி கலந்த நீரை, தெளித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் ஊர்வலமாக வந்த வட மாநிலத்தவர்கள், தங்களது பாரம்பரிய நடனங்களை ஆடினர். மேலும், இனிப்புகளை வழங்கி, வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.