அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறியதாவது: மொழி வெறுப்பதற்காக அல்ல. எனவே மொழிகளின் மீதான தேவையற்ற அரசியலை தவிர்க்க வேண்டும். இந்தி தேசிய மொழி. அதைக் கற்றுக்கொள்வது டெல்லியில் சரளமாக தொடர்பு கொள்ள உதவும்.
இதை நான் உங்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.ஆந்திராவில் தாய் மொழி தெலுங்கு. இந்தி தேசிய மொழி, சர்வதேச மொழி ஆங்கிலம். எனவே, முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லது. மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே. மொழியால் அறிவு வராது. தாய்மொழியில் படிப்பவர்கள் மட்டுமே உலகம் முழுவதும் சிறந்து விளங்குகிறார்கள். தாய்மொழி மூலம் கற்றுக்கொள்வது எளிது. இவ்வாறு பேசினார்.