உடல்நிலை மீது உண்மையாகவே அக்கறை இருந்தால் பிரதமர் மோடி எனக்குதான் போன் செய்திருக்க வேண்டும்: நவீன் பட்நாயக்
டெல்லி: "நான் நலமுடன் இருக்கிறேன். கடந்த ஒரு மாதமாக தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறேன். எனது உடல்நிலை மீது உண்மையாகவே அக்கறை இருந்தால் பிரதமர் மோடி எனக்குதான் போன் செய்திருக்க வேண்டும்" என நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருப்பதாக பிரதமர் பேசியிருந்த நிலையில் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார்.


