புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம் டீச்சர்ஸ் காலனி கங்கையம்மன் கோயில் தெருவில் ஏழுமலை (55) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா விற்கப்படுவதாக புழல் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார், கடைக்குள் சென்று சோதனை செய்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் மளிகைக்கடைக்காரர் ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+
Advertisement