திருவனந்தபுரம்: குருவாயூர்-மதுரை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தி அதிகாலை 5.50 மணிக்கு குருவாயூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரையை அடையும். புனலூர் வழியாக செல்லும் ரயில்களில் கூடுதலாக ஒரு என்ஜின் இணைக்கப்படுவது வழக்கமாகும். இது பங்கர் என்ஜின் என்று அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல இந்த ரயில் புனலூர் ரயில் நிலையத்தை அடைந்தவுடன் பங்கர் என்ஜினை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென புகையும், தீயும் வந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதுகுறித்து அறிந்ததும் ரயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சதி வேலையாக இருக்கலாமோ? என்று கருதி மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு பிறகு ரயில் மதுரைக்கு புறப்பட்டது.
+
Advertisement