Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குஜராத் மாநிலம் கோத்ரா மையத்தில் தேர்வு முடிந்த பிறகு ஆன்லைனில் வரும் விடைகளை பார்த்து தேர்வர்களின் விடைத்தாள் பூர்த்தி செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்

குஜராத்: குஜராத் மாநிலம் கோத்ரா மையத்தில் தேர்வு முடிந்த பிறகு ஆன்லைனில் வரும் விடைகளை பார்த்து தேர்வர்களின் விடைத்தாள் பூர்த்தி செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. நீட் தேர்வில் 2-வது முறையாக தேர்வெழுதும் மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2022 தரப்பட்டியலில் சுமார் 1 லட்சத்துகும் மேற்பட்ட இடத்திலிருந்தவர், 2-வது முறை தேர்வெழுதி 8,000-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் தற்போது அவர் மும்பை மருத்துவ கல்லூரியில் படித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரவரிச்சை பட்டியலில் 10 லட்சத்துக்கும் அதிகமான இடத்திலிருந்த மாணவர் கடந்தாண்டு 2-வது முறை தேர்வெழுதியபோது 13,000-ஆவது இடத்தை பிடித்தார்.

2-வது முறை தேர்வெழுதும்போது யாரும் நம்பவே முடியாத அளவு பல மாணவர்கள் மதிப்பெண் பெற்றதும். 2-வது முறை தேர்வெழுதும்போது முக்கிய நகரங்கள் அருகே உள்ள அறிமுகம் இல்லாத ஓரில் அவர்கள் தேர்வெழுதியதும் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள பள்ளியில் பல வெளிமாநில மாணவர்கள்தேர்வெழுதியுள்ளனர். கோத்ரா மையத்தில் தெரிந்த கேள்விகளுக்கு விடைகளை குறித்துவிட்டு மற்ற கேள்விகளை விட்டுவிடுமாறு மாணவர்கள் கேட்டுகொள்ளப்பட்டனர்.

பூர்த்தி செய்யப்படாத கேள்விகளுக்கு தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் பதில்களை குறிப்பிட்டதும், தேர்வு முடிந்த பிறகு நீட் பயிற்சி மையத்திலிருந்து ஆன்லைனில் வரும் விடைகளை பார்த்து தேர்வர்களின் விடைத்தாள் பூர்த்தி செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்காக குறிப்பிட்ட மையங்களை மாணவர்கள் தேர்வு செய்ததிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது.

நீட் தேர்வு விண்ணப்பங்களை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதாக கூறி, தரகர்கள் பேரம் பேசியதும் அம்பலமாகியுள்ளது. தேர்வு மையம் வெகுதூரத்தில் இருக்கும் என்று பெற்றோரிடம் கூறும் தரகர்கள் ரூ.1 லட்சத்தை முன்பணமாக பெற்றுக்கொள்கின்றனர். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு எஞ்சிய ரூ.9 லட்சத்தை இடைத்தரகர்களுக்கு பெற்றோர் தரவேண்டும்.