Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜராத்தின் வதோதராவில் பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆனது

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா, ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் விதமாக மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கம்பீரா பாலத்தின் ஒரு பகுதி கடந்த 9ம் தேதி இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் 17 பேர் பலியாகினர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 2 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.