Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதவித் தொகையுடன் கூடிய ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆவணக்காப்பக ஆணையர் தகவல்

சென்னை: வரலாறு, சமூக அறிவியல், தமிழ் தொடர்புடைய துறைகளில் உதவி தொகையுடன் கூடிய ஆராய்ச்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், முதுகலை பட்டப்படிப்பை முடித்த கல்வியாளர்களிடம் இருந்து சென்னை, எழும்பூர், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் நோக்கம், ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவணக்காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து, சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய வகையில் தங்களது ஆராய்ச்சியினை மேம்படுத்திக் கொள்வதற்கும், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றினை வெளிக் கொணர்வதற்கும் உதவுவதாகும். விண்ணப்பத்தின் விவரங்கள் மற்றும் படிவம் ஆகியவற்றை www.tamilnaduarchives.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 3ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.