Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.90.52 கோடியில் 150 புதிய பேருந்துகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, ₹90.52 கோடி மதிப்பிலான பிஎஸ் 6 ரக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 150 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்த பின் அமைச்சர்கள் பேருந்தில் ஏறி பார்வையிட்டனர்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பிஎஸ் 6 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 புதிய பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற ஏர் சஸ்பென்சன் வசதி செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளன. படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. நடத்துனரால் பயணிகளுக்கு தகவல் அறிவிப்புகளுக்கான ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசாங்க விதிமுறைகளின்படி காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக எலக்ட்ரானிக் மேக்னடிக் ரேடர் நிறுவப்பட்டுள்ளது. இன்ஜின் தீயை முன்கூட்டியே திறம்பட அனுமானித்து, தீ கட்டுபட்டு அடக்கும் அமைப்பு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.