சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை வந்த இமெயிலில் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது வெடிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் விரைந்து வந்து சோதனையிட்டனர். 2 மணி நேர சோதனையில் அது புரளி என தெரியவந்தது. இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement


