சென்னை: தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்புவது விதிமுறைகளை மீறும் செயல். ஒரு அரசை மட்டுமல்லாமல் நீண்ட கால இலக்குகளை அடிப்படையாக கொண்டு நிதிநிலை பொறுப்புடைமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றம் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்ற அனைத்து உரிமையும் உள்ளது. 18 மாதங்களுக்கு பிறகு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின்படி மறு ஆய்வு செய்து சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement
