Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம் மே மாதம் 7.74 லட்சம் பயணிகள் முன்பதிவு

சென்னை: அரசு பேருந்துகளில் மே மாதத்தில் மட்டும் 7 லட்சத்து 74 ஆயிரத்து 496 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். விடியல் பயண திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் இலவசமாக மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை ஏழு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 440 கோடி விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தினசரி 51 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மூலம் பயனடைந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களிலும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியாக செல்வதற்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இப்படி முக்கிய பண்டிகை மட்டுமல்லாது வார விடுமுறை நாட்களில் கூட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தனியார் பேருந்துகளுக்கு நிகராக எஸ்இடிசி பேருந்துகளில் அனைத்து வசதிகளும் தற்போது உள்ளது. மேலும் உடனுக்கு உடன் முன்பதிவும் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்கன் அரசு பேருந்துகளை விரும்பி பயணம் மேற்கொள்கிறார்கள். 2025ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 496 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதத்தில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முன்பதிவு தற்போது அதிகரித்துள்ளது.